Categories
மாநில செய்திகள்

கொரோனா நிவாரணம் ரூ.50,000 பெற…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..? வாங்க பார்க்கலாம்…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில் ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்த அரசாணை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். இந்த உதவி தொகையை பெறுவதை எளிமையாக்கும் விதமாக தமிழக அரசு https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள “வாட்ஸ் நியூ (what’s new) பகுதியில் “Ex-Gratia for Covid-19″ என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

Categories

Tech |