Categories
மாநில செய்திகள்

கொரோனா நிவாரண பொருட்களுக்கு…. ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

இந்தியா கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். மேலும் வெளிநாடுகளிலிருந்தும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு நன்கொடையாக கொடுக்கப்படும் கொரோனோ தொடர்பான நிவாரண பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |