Categories
உலக செய்திகள்

“கொரோனா நீண்ட கால பிரச்சனையா?”…. அதிபரின் கருத்து என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸ் நீண்ட கால பிரச்சனையாக இருக்காது என்று நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் நாட்டில் பெரும்பான்மையான பள்ளிகள் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக தான் தற்போது செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே நாட்டில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில், அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் தொற்று பரிசோதனை தொடர்பான உத்தரவுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு பேசியுள்ளார்.

Categories

Tech |