Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாங்க… தம்பதிக்குப் குவியும் பாராட்டு…!!

கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாருங்கள் என்று திருமண அழைப்பிதழில் பொறிக்கப்பட்டிருந்தது வரவேற்ப்பை பெற்றுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் சேர்ந்த விஜய் என்பவருக்கும், ஜெய்ப்பூரை சேர்ந்த வைஷாலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை அறிவித்த அவர்கள் கொரோனா  விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டும் மக்களுக்கு மத்தியில் இவர்கள் ஒருபடி மேலே சென்று திருமண அழைப்பிதழில் கொரோனா எதிர்மறை சான்றுகளுடன் திருமணத்திற்கு வாருங்கள் என்று அச்சிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து திருமணம் மாப்பிள்ளை கூறுகையில் “கொரோனா  பரவல் அதிகரிப்பதால் நிச்சயம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதை நன்கு அறிந்து கொண்டு திருமண அழைப்பிதழில் கொரோனா  எதிர்மறை சான்றிதழ் வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அனைத்து நிகழ்ச்சிகளிலும், அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |