தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக இரண்டாவது அலை பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்புகள் அதிகரித்து வருவது தமிழகத்தை கவலை அடைய செய்துள்ளது. இவ்வாறு கேரளாவில் தொற்று அதிகரித்து வரும் சூழலில் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் குமுளி வழியாக செல்லும் தமிழக தொழிலாளர்கள் தடுப்பூசி சான்றுடன் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.