Categories
தேசிய செய்திகள்

“கொரோனா நெகட்டிவ் சான்று” இருந்தால் மட்டுமே…. பக்தர்களுக்கு அனுமதி…!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. அதன்படி பக்தர்களுக்கு தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Categories

Tech |