Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளின் விவரங்களை பராமரிக்க மையங்கள்… உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய விவரங்களை பராமரிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆதிகேசவன் என்ற முதியவர், திடீரென மருத்துவமனையிலிருந்து காணாமல்போனார். அவரைக் கண்டுபிடித்து மீட்கக் அவரது மகன் துளசிதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது, சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை தரப்பில் அதற்கான பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சென்னையில் உள்ள நான்கு முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், 51 ஆதரவற்றோர் முகாம்களிலும் விசாரணை நடத்தப்பட்ட போதிலும் முதியவர் ஆதிகேசவன் பற்றி எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.  மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் எப்போது அனுமதிக்கப்பட்டார்கள்? எப்போது குணமடைந்து வீடு திரும்பினார்கள்? போன்ற விவரங்களைப் பராமரிப்பதற்காக, சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பதிவுசெய்த நீதிபதிகள், காணாமல்போன ஆதிகேசவன் சம்பந்தப்பட்ட விவரங்களை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

Categories

Tech |