டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவசமாக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மருத்துவமனைகளில் பயணிகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் சேவையும் போதாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் ஆட்டோக்கள் சில ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆம்புலன்ஸ் சேவை பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.
இந்த மூன்று சக்கர ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் கொரோனா சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளை மருத்துவமனையில் இறக்கி விட்ட பிறகு கிருமிநாசினி கொண்டு முழுவதும் சுத்தம் செய்த பிறகே, அடுத்து நோயாளிகளை ஏற்றிச் செல்லும். மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டுள்ளது. இது டெல்லியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.