கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகநாடுகள்முழுவதும் பரவத்தொடங்கியது .அதனால்,மக்கள் அனைவரும் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் .இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரின் உடலை தாக்கினால் அவருடைய நுரையீரல் ,இதயம் மற்றும் சிறுநீரகம் மற்ற உறுப்புகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் தற்போது குணம் அடைந்தாலும் பின்னர் அவர்களுடைய எதிர்காலத்தில் பலவித பாதிப்புகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள உயிர் அணுக்கள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. மேலும் அவர்களின் ஆண்மை தன்மை பறிபோகும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ஹைதராபாத், நாக்பூர், பெங்களூர், பாட்னா, சண்டிகரில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனா வைரஸின் பின்விளைவுகளை பற்றி ஆய்வு நடத்தினார்கள் .கொரோனா வைரஸ் ஒருவரை பாதித்தால் அது அவர்களுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் . இந்நிலையில் கொரானா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்திக்கான சத்தான உணவு வகைகளையு ம் ,பழங்களையும் சாப்பிட வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.