மும்பை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மற்றும் மருந்து வழங்க ரோபோ ஒன்று வடிமைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து, வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்ள கவச உடைகளை உடல் முழுவதுமாக அணிய வேண்டிய நிலை உள்ளது. ஆனாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு என்பது அதிகரித்து தான் வருகிறது. அவர்கள் அணியும் அந்த கவச உடைகளை கழற்றாமல் பணிபுரிவதால் பல்வேறு சிரமங்களையும் அனுபவித்து வருகின்றனர். இத்தகைய சிரமத்திற்கு தீர்வு காணும் வகையில் மும்பை ஒர்லியில் உள்ள பொடார் தனியார் மருத்துவமனையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு வார்டில் ரோபோ மூலம் இயங்கும் டிராலி ஒன்று அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
இந்த வகை ரோபோ டிராலி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி வந்த செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் விலகியிருக்க வழிவகை செய்துள்ளது. இதனால் அவர்களுக்கு தொற்று பரவும் ஆபத்தும் குறையும் என முதல்-மந்திரி அலுவலக டுவிட்டர் பக்கத்தில் அந்த ரோபோ டிராலியின் வீடியோவுடன் கூடிய காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளது.