Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிகள் இருந்த…. மருத்துவமனையில் தீ விபத்து…. 7 பேர்க்கு நேர்ந்த துயரம்….!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் தீடிரென தீ பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அஸ்ர் அல் அமர் என்ற மருத்துவமனை உள்ளது. இது மத்திய கெய்ரோவின் வடகிழக்கில் 19 மைல் தொலைவிலிருக்கும் எல் ஒபூரில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இது குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் மின்சார பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரையும் கெய்ரோவில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |