கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் டாக்டர் ஸாகிர் ஹுசைன் மருத்துவமனையில் வழக்கம் போல் நேற்று ஆக்சிஜன் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் திடிரென ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து ஆக்சிஜன் கசிவை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் பல நோயாளிகள் கவலைக்கிடமாக இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 170 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் உதவி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் 22 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நோயாளிகள் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார்.