Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோய் பரவல் காரணமாக… 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்க வாய்ப்பு….!!

 மகராஷ்டிராவில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளதாக மாநில பள்ளி கல்வி துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிராவில் கொரோனா நோய்தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மூடப்பட உள்ளது. அதனால் 1 முதல் 9-ம் வகுப்புகள் மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாநில பள்ளி கல்வி துறை ‘மந்திரி வர்ஷா கெய்க்வாட்’அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று இவர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வை எப்படி நடத்துவது என்று நான் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றேன்.

அதில் மாணவர்களின் தேர்வை விட அவர்களை கொரோனா நோய்தொற்றிடமிருந்து  பாதுகாப்பதே முக்கியமானது என்று ஆலோசனையின் மூலம் தெரிவிக்கப்பட்டது. எனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று மாநில மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஆன்லைன் மூலம் கலந்து ஆலோசனை நடத்தி இரண்டு நாட்களில் அறிவிப்பை வெளியிடுவேன் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளார்.

Categories

Tech |