நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவிற்கு தேவையான நிதி உதவியை பல்வேறு நிறுவனங்களும், பிரபலங்களும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவின் ககொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் சார்பில் ரூ.113 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகை மூலம் இந்தியாவில் 80 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், கிராமப்புறங்களில் உள்ள சுகாதார பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூகுள் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார்.