Categories
தேசிய செய்திகள்

கொரோனா பணிக்கு….. இவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்…. மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணிவரை செயல்படலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பி உள்ளது.

அதில் பிஎஸ்சி நர்சிங் 3 மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் இளநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருதுவர்களையும் பயன்படுத்தலாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஒய்வு பெற்ற மருத்துவ நிபுணர்களை காணொளி மூலம் மருத்துவ ஆலோசனை தர பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |