Categories
இயற்கை மருத்துவம் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் லைப் ஸ்டைல்

கொரோனா பயத்தை விடுங்க…. சென்னைக்கு 10 டிப்ஸ்… நம்பிக்கையூட்டிய தலைநகர் …!!

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி 10 டிப்ஸ் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவின் மையமாக இருந்து வந்த தலைநகர் சென்னையை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசு மீட்டு வருகின்றது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அமைச்சர் குழு நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் பலனாக கடந்த ஏழு நாட்களாக சென்னையில் நோய் தொற்று 2000த்திற்கும்  கீழ் பதிவாகியுள்ளது. இது மிகுந்த நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களுக்கு பல்வேறு உத்தரவுகளையும், அறிவுரைகளையும் பிறப்பித்து வருகின்றது. அதன் வகையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சியை 10 அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது. அதில்,

காலையில் ஒருவேளை மட்டும் கபசுரக் குடிநீர் குடிக்க வேண்டும். குழந்தைகள் 30 மில்லியும், பெரியவர்கள் 60 மில்லியும் கபசுரக் குடிநீர் பருக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்போது சூடான நீரைப் பருக வேண்டும்.

சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான நீரில் காலை மாலை இரு முறை வாய் கொப்பளிக்கவும் சென்னை மாநகராட்சி சொல்லியுள்ளது.

தினந்தோறும் துளசி, நொச்சி, வேப்பிலை இவற்றுள் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்து நீர் ஆவி பிடிக்க வேண்டும்.

காலை, மாலை என இருவேளைகளிலும் சூடான ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள், மூன்று சிட்டிகை மிளகுத் தூளுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து பருகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஞ்சி, துளசி, மிளகு, அதிமதுரம், மஞ்சள் தூள் ஆகியவற்றை கொதிக்க வைத்து வடிகட்டி இரண்டு வேளையும் மூலிகை டீ குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேப்பம்பூ ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம் என ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிடலாம்.

நாட்டு நெல்லிக்காய், துளசி, எலுமிச்சை, இஞ்சி, மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து இயற்கை பானத்தை பருகலாம்.

அன்னாசி, ஆரஞ்சு, சாத்துகுடி ஏதேனும் ஒரு பழ சாறு அருந்தவும்,

தினமும் 15 முதல் 20 நிமிடம் வரை காலை ஏழரை மணிக்குள்ளும் மாலை 5 முதல் 6 மணிக்குள் சூரிய குளியல் எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |