ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்த ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். விஜய் ஆசாரி என்பவர் நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை குடும்ப உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த நபர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு கட்டிடத்தின் 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.