இந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு பயணம் இல்லாத வருடமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ம் வருடம் பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து 2019ம் வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி வகித்து வருகிறார். இதனிடையே 2014ம் வருடம் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி பல்வேறு வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி 2014 முதல் இதுவரை சுமார் 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் இந்தப் பயணத்திற்காக சுமார் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020-ம் வருட ஆரம்பத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியுள்ளதால் அனைத்து நாடுகளுக்கும் விமான சேவை தடை செய்யப்பட்டதன் காரணமாக பிரதமர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 2010ஆம் வருடம் பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத வருடமாக மாறியுள்ளது. 2020 ம் வருடம் நவம்பர் 22 வரை பிரதமர் மோடி எந்த ஒரு சர்வதேச பயணத்தை கூட மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.