Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி… போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை..!!

பெரம்பலூரில் கொரோனோ வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செல்லக்கூடாது என்று கூறினார். அதன் பின்னர் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிந்து செல்வது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Categories

Tech |