கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசர நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரத்துக்குப் பிறகே மருத்துவமனைக்கு பிற நோயாளிகள் வரலாம் என்றும், அதுவரையிலும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டியோர் ஆன்லைன் மூலம் மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் அவசர உதவி தேவைப்படும் நோயாளிகள் மட்டும் மருத்துவமனைகளுக்கு பல்நோக்கு மருத்துவமனைகளுக்கு தனியார் மருத்துவமனைக்கு வரலாம் என்று கர்நாடக மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தவிர, புறநோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டியவர்கள், பல் தொடர்பான சிகிச்சை பெற வேண்டியவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதே நடவடிக்கையை தனியார் மருத்துவமனைகளும் பின்பற்றுமாறும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் இந்த கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.