Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலை கருத்தில்கொண்டு… மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்த மம்தா வலியுறுத்தல்..!!

கொரோனா  தொற்று அதிகரித்து வருவதால் மேற்குவங்கத்தில் மீதி இருக்கும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திரிணமூல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மீதமுள்ள நான்கு கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நோய்தொற்றுக்கு மத்தியில் மேற்குவங்க தேர்தலை 8 கட்டங்களாக நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முடிவை தொடக்கத்திலேயே திரிணமூல் கட்சி எதிர்த்தது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தும் முடிவை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |