Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க… ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்… ஆலோசனை கூட்டம்..!!

கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் காளாப்பூர், பிரான்மலை, செவல்பட்டி உள்பட 30 ஊராட்சி செயலாளர்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை தடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவது, அனைத்து ஊராட்சிகளிலும் கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் ஆகிவற்றை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் தினகரன் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் அலுவலக பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |