சிவகங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தொற்று சில இடங்களில் வேகமெடுத்து பரவி வருவதால் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முககவசம் அணியாமல் பொது இடங்களில் செல்பவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்துள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்றால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினான் ரூ. 500, அரசினால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் வழிகாட்டுதல் மீறி நடந்தால் ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சரவணன், முத்துச்செல்வம், பொன்முணியாண்டி, வருவாய் ஆய்வாளர் இளையராஜ் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சேர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தர்மலிங்கம் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு முககவசம் அணியாமல் சென்று கொண்டிருந்த 13 பேரிடம் ரூ. 200 அபராதம் வசூலித்துள்ளனர்.