Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க…. 13 பேர் கொண்ட குழு அமைப்பு…. பொதுமக்கள் பாராட்டு…!!!

ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்துபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதலவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் திமுகவின் நா.எழிலன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.எம் விஜயபாஸ்கர், முனிரத்தினம்(காங்கிரஸ்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.  தரப்பினரிடமிருந்தும் நல்ல வரவேற்பைபெற்றுள்ளது. இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |