Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் அச்சுறுத்தல்… குளோரினேசன் முறையை பயன்படுத்துங்க… மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை சுத்தப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தற்போது மக்களுக்கு வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சுத்தம் (குளோரினேசன்) செய்யும் பணி நவீன முறையில் நடைபெற்றது. இந்த புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது, தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் குளோரினேசன் செய்வதற்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் புதிய தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அருகாமையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் நீர் ஏற்றம் செல்லும் பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டு பணியாளர்கள் தரையிலிருந்து எளிதாக குளோரினேசன் கலந்து குடிநீரை நன்றாக சுத்தம் செய்ய முடிகிறது. தற்போது 445 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,973 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஒவ்வொரு நாளும் தொழில் நுட்பத்துடன் கூடிய இணைப்புகள் பொருத்தப்பட்டு குளோரினேசன் முறை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |