மராட்டியம் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்டிப்படைத்து வருகிறது சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. மராட்டியம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாக மராட்டிய மாநிலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனை காரணமாக மராட்டியம் மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தற்போது ஓட்டல், மார்க்கெட் போன்றவற்றை மூட அம்மாநில முதல்வர் விஜய் வேதித்துவார் கூறினார். இதுகுறித்து அவர் கூறும்போது ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் விதித்து இருக்கிறோம்.
மக்கள் கூடும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர இருக்கிறோம். இதன் காரணமாகவே விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. ரயில்களின் எண்ணிக்கையும் குறைப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார். மேலும் மாணவர்கள் ஆன்லைன் மூலமே கல்வி பயில்வதற்கு, தேர்வு எழுதுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.