Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல்… ஆக்சிஜன் இருப்பு உள்ளதா…? முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சப் கலெக்டர் ஆய்வு…!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று சப் கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணி வார்டு போன்ற பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார்.

மேலும் மருத்துவமனையில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதா? என மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 462 படுகைகளிலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரானா சிறப்பு வார்டில் தற்போது 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோக தேவை ஏற்பட்டால் மேலும் கூடுதலாக 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்த முடியும். கொரோனா பரவலை தடுக்கும் விதமான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய ரத்த மாதிரிகள் பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆறு மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் பாதிப்பை தடுப்பதற்கு தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த சப் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |