தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது
தை முதல் நாள் ஆன இன்று பொங்கல் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. குடும்பமும் உறவுமாக சேர்ந்து கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை இதனை சூரிய பொங்கல் என்றும் சொல்வார்கள்.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை புது பானையில் பச்சை அரிசியும், வெல்லமும் ஈட்டு மஞ்சள் குலை கட்டி சூரியபகவானுக்கு அதை படைத்து பொங்கல் பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என கோஷங்களை எழுப்பி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
தமிழக முழுவதும் இன்று அதிகாலை தொடங்கி கொரோனா பரவளுக்கு இடையையும் கிராம புரங்கள் மற்றும் நகரங்களில் பொங்கல் பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது.