சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சோமநாதர் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிறப்பு வாய்ந்த சோமநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 10 நாட்களாக சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் சித்திரை திருவிழா காரணமாக கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு முன்பு நேற்று முன்தினம் சோமநாதர், ஆனந்தவல்லி அம்மன், பிரியாவிடையுடன் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிவாச்சாரியார்கள் சந்தனம், பால், திரவிய பொருள்கள், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனர். அதன்பின் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் இன்றி 24-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.