டெல்லியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது.
நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால், மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பல மாநிலங்கள் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. பள்ளிகளில் தனிமைப்படுத்தல் அறையை அமைக்க வேண்டும் .மேலும் கொரோனா தொடர்பான ,அறிகுறிகள் குறித்து மாணவர்கள், பெற்றோரிடம் ஆசிரியர்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மாணவர்கள் தங்களது உணவு மற்றும் புத்தகங்களை பகிர்ந்துகொள்ளக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.