Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… பக்தர்கள் இன்றி திருவிழா… வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் வைகை ஆற்றில் பக்தர்கள் இன்றி பெருமாள் இறங்கினார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோட்டையில் சிறப்பு வாய்ந்த பாலகிருஷ்ணன் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நான்கு நாள்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கோவிலில் உள்திருவிழாவாக நடத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 17-ம் தேதி திருவிழா தொடங்கியது. பாலகிருஷ்ணன் பெருமாள் நேற்று முன்தினம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு வைகை ஆற்றுக்கு தங்க நிற குதிரையில் சுவாமி கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டார். அங்கு வைகை ஆற்றில் பக்தர்கள் இன்றி பெருமாள் எழுந்தருளினார். அதன் பின்னர் சுவாமி நகர் பகுதியில் திருவீதி உலா வந்து கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Categories

Tech |