Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது…. தமிழக அரசுக்கு ராமதாஸ் நன்றி….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய கடலோர மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூரை காட்டிலும் சென்னையில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி, இதற்கு காரணம் ஊரடங்கு தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செயலை பாராட்டி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |