14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முழு ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சுகாதாரத்துறை செயலருக்கு மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதால் பரவலை கட்டுப்படுத்துவதற்கு 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.