கொரோனா பரவலின் காரணமாக சனிக்கிழமையும் இறைச்சி கடைகளுக்கு அரசு தடைவிதித்துள்ளது.
உலங்கெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும் வாரத்தின் பிறநாட்கள் இரவு நேர ஊரடங்கையும் அமுல் படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியேவர அனுமதியுள்ளது.
மேலும் இறைச்சிக் கடைகள், காய்கறி கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்து கடைகளும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் செயல்பட அனுமதி கிடையாது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணத்தால் சனிக்கிழமை இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை அடுத்து கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் சனிக்கிழமையும் இறைச்சி, மீன் கடைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.