Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக…. குமரி மாவட்டத்தில் 12 சாலைகள் மூடப்பட்டது…!!

கொரோனா பரவலின் இரண்டாம் நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் 12 சாலைகள் மூடப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு என முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.

மேலும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக குமரியில் உள்ள தமிழக-கேரள எல்லை பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக கேரள எல்லையில் கேரளாவை இணைக்கும் 12 சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |