Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்… “சரி பார்க்கப்பட்ட தகவலை மட்டும் பகிர வேண்டும்”… மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு…!!!!!

கொரோனா பரவல் தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே பகிர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 100 பேருடன் திங்கட்கிழமை காணொலி  வழியாக கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பு தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே மற்றவர்களுக்கு பகிர வேண்டும். ஏனென்றால் கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதும் அவற்றை பின்பற்றுவதும் எந்த அளவிற்கு முக்கியமோ? அதுபோல கொரோனா பாதிப்பு குறித்த நம்பகத்தனமான தகவலை மட்டும் பகிர்ந்து தவறான தகவல் பெறாமல் தடுப்பது முக்கியமாகும்.

நம்பகத்தனமான தகவலை பகிர்வதன் மூலம் மட்டுமாக மக்களிடையே கொரோனா வரவல் அச்சத்தை தடுக்க முடியும். மேலும் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள், தடுப்பூசி பாதிப்பை குறைப்பதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி நோய் தொற்று தொடர்பாக அவர்களுடைய சிறிய அளவில் ஏற்படும் பயத்தையும் போக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |