சீனாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் திறன் குறைவாக இருந்த போதிலும் பிற தடுப்பூசிகளை சீனா பயன்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த நாடு வேக்சின்கள் பக்கம் திரும்பி உள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தை விநியோகம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் சீனா கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளது.
அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இனி தடுமைப்படுத்திக் கொள்ள வேண்டியது இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி வருகிற 8-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால் தற்போது வெளிநாடுகளில் இருந்து சீனா வருபவர்கள் 5 நாட்கள் ஓட்டலிலும், அதன் பின் 3 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.