கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் சரியாக இரண்டில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக கேரள மாநில அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி மகாராஷ்டிரா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மூன்றாம் அலையின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியுள்ளது. ஆனால் கேரளாவை பொறுத்தவரை தொற்று பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு புதியதாக நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரனோ பரிசோதனை செய்து கொள்ளும் இரண்டு பேரில் சரியாக ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை கேரள அரசு வெளியிட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.