கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழா வருகிற 26-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கொரோனா அச்சம் காரணமாக கோவில் வளாகத்திளே திருவிழா நடைபெறும் என்றும், திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் 24ஆம் தேதி அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பழைய திருமண மண்டபத்தில் திருமண கோலத்தில் காட்சி தரும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.