சீனாவில் 2018 ஆம் ஆண்டு பரவிய பன்றி காய்ச்சலே கொரோன நோய்தொற்றாக மாறி அது மனிதர்களுக்கு பரவ வழிவகுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாட்டில் பரவிய பன்றி காய்ச்சல், சீனாவிற்கும் பரவி பன்றி இறைச்சி விற்பனையை சீர்குலைக்கிறது. இதனால் மக்கள் மற்ற விலங்குகளின் இறைச்சியை உண்டதால் , இந்த கொரோன வைரஸ் பரவியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர் . பெருமளவு சீனாவில் பன்றி இறைச்சியை மக்கள் அதிகம் சாப்பிடுவர்.
ஆனால் இந்த பன்றி காய்ச்சல் பாதிப்பினால் பன்றி இறைச்சியை தவிர்த்து மக்களிடம் வேறு விலங்குகளின் இறைச்சிக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது .இதன் காரணமாக கொரோன நோய் மனிதர்களுக்கு பரவி இருக்கும் என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது. மனிதர்கள் விலங்குகளின் இறைச்சிகளை அதிகமாக சேர்ப்பதன் மூலம் கொரோன தொற்று பரவியிருக்க வாய்ப்பு அதிகரித்து காணப்படுவதாக கிளாஸ்கோ பல்கலைக்கழக உயிர் தகவல்தொடர்பு பேராசிரியரான டேவிட் ராபர்ட்சன் கூறியுள்ளார் .