பிரித்தானியாவில் சிறுவனுக்கு கொரோனா இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பிரித்தானியாவில் Durham-ன் Darlington என்ற பகுதியில் Cody Lockey என்பவர் வசித்துவருகிறார். 12 வயதான இந்த சிறுவனுக்கு சில நாட்களுக்கு முன் காய்ச்சல், உடல் வலி மற்றும் சளி பிடித்தது போல் இருந்திருக்கிறது. அதனால் அவரின் தாய் Lisa Marie இந்த அறிகுறிகள் கொரோனாவிற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று கருதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது மருத்துவரிடம் சிறுவன் இடுப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வலியை உணர்ந்ததாக கூறியிருக்கிறான். அதன் பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதன் பிறகு, சிறுவனுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியது. அதனைத் தொடர்ந்து உண்மையான காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்த போது, சிறுவனின் தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அது என்னவென்றால், சிறுவனுக்கு lymphoblastic leukaemia என்னும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதுவும் கொரோனா போன்ற நோயின் அறிகுறிகளான சோர்வு, எலும்பு வலி மற்றும் காய்ச்சல் ஆகியவை தொடர்ந்து ஏற்படும். என்ற செவ்வாய்க்கிழமை இவரின் குடும்பத்தினர் Newcastle’s Royal Victoria என்ற மருத்துவமனைக்கு சென்றபோது இந்த நோய் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதுபற்றி சிறுவனின் அத்தை கூறும்போது, அவள் தன் மகனுக்கு உடல் நலம் சரியில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.போது சென்ற மூன்று தினங்களாகவே இடுப்புப் பகுதியில் வலி இருப்பதாக அவரது மகன் மருத்துவரிடம் கூறி இருக்கிறான்.அது மட்டுமன்றி அவரின் உடல்நிலை அறிகுறிகள் அனைத்தும் கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் போன்று இருந்துள்ளன.
அதன் பின்னர் கொரோனா பரிசோதனை செய்த இடத்தில், ரத்தப் புற்றுநோய் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதைக்கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்துள்ளாள். சிறுவனின் எலும்பு மஜ்ஜையில் நோய் செல்கள் முழுவதுமாக நிறைந்திருக்கின்றன. இது வேறு பகுதியில் எங்கும் பரவவில்லை. சிறுவனுக்கு கடுமையான ரத்தப் புற்றுநோய் இருக்கிறது. அதே சமயத்தில் ரத்த அளவு மிகக்குறைவாக உள்ளது. அதனால் சிறுவனுக்கு ரத்தம் மாற்றம் இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை அவனுக்கு கீமோதெரபியை தொடங்கி உள்ளனர். சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பலனளிக்கும் வரை மருத்துவமனையில் இருப்பான் என்று சிறுவன் அத்தை கூறியுள்ளார்.
சிறுவனின் அத்தையின் சொந்த மகள் 32 வயதில் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அதனால் அவருக்கு இந்த மன வேதனை நன்றாக புரியும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு Cee-jay(10) மற்றும் Mia(13) என்ற இரண்டு உடன்பிறந்தவர்கள் இருக்கின்றனர். அதே சமயத்தில் புற்றுநோயால் பாதிப்படைந்துள்ள சிறுவன் இன்னும் சில வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பான் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதால், எலும்பு மஜ்ஜை தானம் செய்யும் நபரை எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.