நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் பல மாநிலங்கள் கொரோனா பரிசோதனைகளை குறைத்து இருப்பதாக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆகவே கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தால் பரிசோதனை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.