காவலர் ஒருவரை தந்தை மற்றும் மகன் இணைந்து கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. எனவே அதிக பாதிப்படைந்த மாகாணங்களில் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள லியாங்கிங் என்ற மாகாணத்தில் உள்ள ஷேன் யாங் என்ற நகரில் கடந்த ஜனவரி 1ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதில் கலந்துகொள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்துள்ளனர்.
அப்போது லின் என்ற குடும்ப பெயருடைய தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதிக கூட்டம் இருந்துள்ளது. இதனால் விரைவாக பரிசோதனை செய்து விட வேண்டும் என்று அவரின் தந்தை வரிசையில் முன்னால் இருப்பவர்களை விலக்கி கொண்டு சென்றுள்ளார். இதனால் வரிசையில் நிற்பவர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட பாதுகாப்பு பணி காவலர் சாங் சண்டையை தடுக்க முயற்சித்துள்ளார். மேலும் அவரிடம் சோதனைக்காக வரிசையில் நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் அவருக்கும் காவலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதனைதொடர்ந்த்து அவரின் மகனும் இணைந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு இந்த வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதனால் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் இணைந்து காவலர் சாங்கை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காவலரின் தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
அதன்பின்பு தாக்குதல் நடத்திய தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கானது சென்யாங் என்ற நகரத்தில் உள்ள குவாங்கியூ என்ற மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இதற்கான விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் காவலர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட குற்றத்திற்காக லின்னுக்கு ஒரு வருட சிறை தண்டனை மற்றும் அவரின் தந்தைக்கு 10 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.