கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலமுறை ஊதியம், கொரோனா நோய் தடுப்பு கருவிகள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய திருச்சி பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் மதுக்கடை முன்பு ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் கவனயீர்ப்பு தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று முதல் ஒரு வார காலத்திற்கு இந்த போராட்டம் நடத்தப்படும் என்றும் கேரளாவில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ள பணி பாதுகாப்பு உள்ளிட்ட வழிமுறைகளை தமிழக அரசும் அமல்படுத்த தொழிற் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.