Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி… ஏற்பட்ட பக்கவிளைவு… இனி எல்லாரும் உஷாரா இருக்கனும்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்திருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.

டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் தங்களின் கொரோனா பாதிப்பு நோயாளியான 11 வயது சிறுமி ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் பார்வை மங்கலாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. சிறுமியின் உடல்நிலை பற்றி குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் தயாரித்து வரும் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றில், ” 11 வயதுடைய சிறுமி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அக்யூட் டேமிலினேட்டிங் நோய் அறிகுறி இருப்பதை கண்டறிந்தோம். குழந்தை வயதினரிடையே இதுவே முதல் பக்க விளைவு. இந்த சிறுமி பார்வையிழப்பு டன் எங்களிடம் வந்து சேர்ந்தார்.

அதன்பிறகு சோதனை நடத்தியதில் இது ஒரு பக்க விளைவு என்று கண்டறியப்பட்டது. இருந்தாலும் வைரஸ் மூளை மற்றும் நுரையீரலை பெரும்பாலும் பாதிக்கிறது என்பது இதிலிருந்து தெரிய வந்துள்ளது. ஏடிஎஸ் என்பது நரம்புகள் மெயிலின் எனப்படும் பாதுகாப்பு அடுக்கு உடன் மூடப்பட்டு இருக்கும். இது மூளையில் இருந்து வரக்கூடிய செய்திகளை உடல் வழியாக செயல்படுத்துவதற்கு உதவுகிறது. இந்த பாதிப்பால் சிறுமியின் மூளை சமிஞ்சைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இதனால் பார்வை, தசை இயக்கம், புலன்கள், சிறுநீர்ப்பை மற்றும் குடல் இயக்கம் போன்ற நரம்பியல் செயல்பாடுகள் அனைத்தும் வரம்பை பாதிக்கும் அபாயம் ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |