Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா பாதிக்காமல் இருக்க… இந்த சூப் குடிங்க…!!

வெற்றிலையின் அற்புதமான பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

ஒரு நாள் மழை ஒரு நாள் வெயில் என பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. அதன் காரணத்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, குறிப்பாக சளி, இருமல் பிரச்சினை உருவாகிறது. கொரானா காலம் என்பதால் சாதாரண சளி, இருமலுக்கு எந்த ஸ்பெஷலிஸ்டிடம் செல்வது? என்று யோசிக்கும் நிலை உள்ளது. அதனை குணப்படுத்த வெற்றிலை சூப் நல்ல ஒரு மருந்தாகும்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர்                                                           – 1 கப்
சீரகப் பொடி                                                      –  அரை ஸ்பூன்                                                                                      மிளகு பொடி                                                     – அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி                                                   – 1 டீஸ்பூன்
துளசி இலை                                                      – 1 கைப்பிடி அளவு
வெற்றிலை, தூதுவளை இலை             – 1 கைப்பிடி அளவு
புளிக்கரைசல், உப்பு                                     –  தேவையான அளவு

செய்முறை:

துளசி மற்றும் வெற்றிலையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடானதும் மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை, புளிக்கரைசல், இஞ்சி, தக்காளி, மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நன்றாக கொதித்ததும் வடிகட்டியபின், மிளகுப்பொடி ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து பருகவும்.

Categories

Tech |