நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் டோஸ் தடுப்பூசி தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி இருக்கிறது. 2வது தடுப்பூசி போட்டவர்களுக்கு 9 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.