நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 160% குறை பிரசவத்திற்கு வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவின் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்கள்.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா கர்ப்பிணிப் பெண்களை தாக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வில் அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டதில் முக்கிய முடிவு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு குறைப் பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
அதிலும் நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களை கொரோனா தொற்று பாதித்தால் அவர்களுக்கு 160 சதவீதம் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆகையினால் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசிகளை செலுத்தி அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.