கொரோனா பாதித்த பெண்ணிடம் மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மலபார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த வியாழனன்று அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
பரிசோதனை என்று கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இளம் பெண்ணை வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனால் இளம் பெண் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் தொடர்ந்து கேரளாவில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.