Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால்…தனிமைபடுத்தப்பட்ட…பிரான்ஸ் ஜனாதிபதி…..!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ பாதிப்பால்                      தனிமைபடுத்தப்பட்டுள்ளார். 

உலகத் தலைவர்கள் பலருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோன்னிற்கும்  தற்போது கொரோனோ  பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளதாவது,  “”தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும்

இதன்படி, ஜனாதிபதி மேக்ரான்   தன்னை  ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்வார்” என்று தெரிவித்துள்ளது. மேலும் “அவர் தனிமையில் இருந்து கொண்டே அவரது பணிகளை தொடர்ந்து செய்வார்” என்றும்  “தன்  நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவார்” என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |